ஆமாங்க… இதுக்கு என்ன தலைப்பு கொடுக்கறதுன்னு தெரியல…. அதான் சும்மா-னு வச்சுட்டேன்…. என்னோட நண்பன் கார்த்திக், இதுல உள்ள கேள்விகளை மட்டும் ஒரு tag மாதிரி அனுப்பி இருந்தான்… so சும்மா அந்த கேள்விகளுக்கு அப்பப்ப தோன்றிய விடைகள் தான் இங்க இருக்கு…. அப்படி ஒன்னும் ரொம்ப மொக்கை போடலேனு தான் நினைக்கிறன்…
எனக்கு பிடித்தவை சில….
பிடித்த நிறம் : அந்த முடிவில்லா வானம் தாங்கிடும் நீல நிறம்…
பிடித்த உணவு : American choupsey, chinese noodles, KFC chicken, pizza, burger – னு பீட்டர் எல்லாம் விட மாட்டேன்… நம்ம ஊரு தோசை-தேங்காய் சட்னி-பொடி combination தான் என்னோட fav …
பிடித்த மாதம் : எந்த மாதத்துல நிறைய leave வருதோ, அந்த மாதம் தான்…
பிடித்த பாடல்: எதை விடறது, எதை சொல்றதுன்னு தெரியல… அவ்ளோ பாட்டு இருக்கு.. அதனை பாட்டையும் எழுதருக்கு ஒரு பதிவே வேணும்… so இன்னொரு பதிவில் எழுதுறேன்…
பிடித்த படம்: இதை சொல்றதும் ரொம்ப கஷ்டம் தான். ஒண்ண சொல்லி, இன்னொன விட மனசில்லை.. Bcoz cinema has a great influence on me… so இதுக்கும் ஒரு பதிவு கண்டிப்பா எழுதறேன்…
பிடித்த விளையாட்டு: படித்து முடிக்கும் முன் எழுதிவிட்டேன்… Cricket என்று…
பிடித்த பருவம்(சீசன்): வசந்தத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் இளவேநீர்காலம்…
பிடித்த வார நாள்: வெள்ளிகிழமை… அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறைங்கிற நினைப்பிலேயே போய்டும்…
பிடித்த ஐஸ் க்ரீம் ஃப்ளேவர்: ஐஸ் கிரீம் பலவூர்… ஹ்ம்ம்ம்…. சாக்லேட்…
பிடித்த பொழுது: அழகான இள வெயில் மாலை பொழுது…
பிடித்த அயல்நாட்டு நடிகர்: படத்தில நிறைய சண்டை போட்டாலும், நம்மள சிரிக்க வைக்கிற Jackie Chan …
தற்போதைய….
மனநிலை: சலனமில்லாத அமைதியான மன நிலை…
உடை: இரவு உடை…
கணிணியின் முகப்பு: இந்த தடவயாவது நம்ம நாட்டுக்கு world cup வங்கி தரணும்னு , இன்னும் துடிப்போட விளையாடிகொண்டிருக்கிற சச்சின் டெண்டுல்கர்…
சூழல்: நித்திரை தரும் சூழல்…
எண்ணம்: எப்போது இதை எழுதி முடிப்பேன் என்ற எண்ணம் தான்…
ரிங் டோன் : என்ன சொல்ல போகிறாய்… பாடல் வரிகளாய் இல்லை… keyboard சினுங்கல்களாய்…
காலர் ட்யூன்: நிறைய தடவை மாற்ற நினைத்தும்.. மாற்ற மனமில்லாமல்,… மாற்றாமல் இருக்கும்.. முன்பே வா….
ஐந்து “முதல்”கள்….
முதல் நெருங்கிய தோழன் : நான் தான்…
முதல் நெருங்கிய தோழி : தோழியாய் இருந்த என் தங்கை ஆர்த்தி…
முதல் காதல் மலர்ந்த வயது : 13 வயசு இருக்கும்னு நினைக்கிறன்… அந்த முதல் காதல் மலர்ந்தது… இசையின் மீது…
முதல் செல்லப்பிராணி: மனித பிராணிகளை தவிர வேற பிராணிகளை இதுவரை செல்லமாக பார்த்ததில்லை…
நினைவு தெரிந்து பார்த்த முதல் படம்: ‘மனிதன்‘ என்று நினைக்கிறன்…. ஞாபக சக்தி ரொம்ப ஜாஸ்தியாயிடதுனால சரியா சொல்ல முடியல…
ஆறு “கடைசி”கள்
கடைசி சிகரெட்: புகை பிடித்து என்னை சுற்றியுள்ள பூக்களை புண் படுத்த இதுவரை துணியவில்லை… இனிமேலும் துணியமாட்டேன்..
குடித்த திரவம்: தண்ணீர் தண்ணீர்…
கார் பயணம்: என் தங்கை, cousins எல்லாம் சினிமா போனோம்…
பார்த்த படம் : இப்பதான் பார்த்திட்டு வந்தேன்…. தூங்காநகரம்… நல்ல தான் இருந்தது…
தொலைபேசி உரையாடல்: C .K – வுடன்…
படித்த புத்தகம்: ஒரு பெண்ணின் அதீத கனவுகளும், காதலின் தேடல்களும், மன உறுதியும்… அவளை எங்கெல்லாம் கொண்டு செல்கிறது.. என்னவெல்லாம் செய்ய செய்கிறது… என்பதை சொல்கிற கதையை… Eleven Minutes … எப்போதோ வாங்கிய புத்தகம்… இப்போது தான் படிக்கிறேன்…
நீங்கள் எப்போதாவது சட்டத்தை மீறியிருக்கிறார்களா? தெரிந்தும் தெரியாமலும் சில பல தடவை…
நீங்கள் எப்போதாவது கைது செய்யப்பட்டிருக்கிறார்களா? அந்த அளவுக்கு இன்னும் ஒன்னும் செய்யல…
நீங்கள் எப்போதாவது டீவியில் வந்ததுண்டா? நிறைய தடவை, என் கனவில்… நினைவில் இன்னும் இல்லை…
நீங்கள் எப்போதாவது பொய் சொன்னது உண்டா? பொய்யா?!?!? என் வாழ்நாள்ல ஒரு தடவை கூட சொன்னது இல்லை… இப்ப இதையும் என் பொய் கணக்குல சேர்த்துக்கலாம்…
நீங்கள் முன்பின் தெரியாத பெண்ணிற்கு முத்தம் கொடுத்திருக்கிறீர்களா? முன் பின் தெரியாத பெண்ணிற்கு முத்தம் கொடுக்கும் அளவிற்கு எனக்கு இன்னும் பித்தம் ஏறவில்லை…
இன்று செய்த ஆறு செயல்கள் : இந்த பதிவை எழுதினேன்… சினிமா போனேன்… பொன்னியின் செல்வன் புத்தகம் order செய்தேன்… mechanic shop-ல இருந்து பைக் திரும்ப எடுத்தேன்… என் தங்கை பையனுடன் கிரிக்கெட் விளையாண்டேன்… கதை புக் படித்தேன்…
நீங்கள் இன்று சென்ற ஐந்து இடங்கள்: ஆபீஸ்.. வீடு… சினிமா தியட்டர்… பைக் mechanic கடை… பெட்ரோல் பங்க்… இன்னொரு ஆபீஸ்..
இப்போது காதால் கேட்கும் நான்கு ஒலிகள் : காதால் தான் கேட்க முடியும்… ஹ்ம்ம்… பேன் ஓடும் சத்தம்… key board அழுத்தும் சத்தம்… walkman பாடல்… பல்லியின் சத்தம்….
நீங்கள் சொல்லத்தோன்றியதை தயங்காமல் எந்த மூன்று பேரிடம் சொல்வீர்கள்: கடவுள்… என்னிடம்… இயற்கை… என்னா இவங்க எல்லாரும் தான் என்ன சொன்னாலும், நடுவுல தடுக்காம முழுசா கேப்பாங்க…
போரடிக்கும் போது செய்யும் இரண்டு செயல்கள்: என் செவிகளுக்கும், விழிகளுக்கும் கொஞ்சம் வேலை கொடுப்பேன்… அதாவது பாட்டு கேட்பது… T .V பார்ப்பது…
இறப்பதற்குள் செய்ய விரும்பும் ஒரு காரியம் : இருக்கிற வரைக்கும் இல்லாதவங்களுக்கு என்னால முடிஞ்ச ஏதாவது செய்யணும்… அவ்வளவுதான்…