மயக்கம் என்ன ?!?

  ஏதோ இனம் புரியா தாக்கம் என்னுள்- உன் பிம்பம் என் விழிகளில் விழுந்திடும் பொழுது.    ஏதேதோ எழ முடியா ஏக்கம் என்னுள் – உன் கை விரல் உனையரியாமல் என்னை தீண்டிடும் பொழுது.    ஏதோ மீள முடியா கிறக்கம் என்னுள்- உன் செவ்விதழ் மொழியும் தமிழ் கேட்டிடும் பொழுது.   ஏதேதோ மறைக்க முடியா நடுக்கம் என்னுள் – உன் நிழல் கூட என்னை நெருங்கிடும் பொழுது.   ஏதோ விளக்க முடியா கலக்கம் […]

காணவில்லை!!!

விபூதிப் பட்டையும் குங்குமப் பொட்டையும் இட்டுக் கொண்டாய், இந்துவாய் வாழ்ந்திட. இயேசுவின் சிலுவையையும் கழுத்தில் சுமந்து நடந்தாய், கிருத்துவனாய் வாழ்ந்திட. தலையில் குல்லாவும் முகத்தில் தாடியும் வைத்துக் கொண்டாய், இஸ்லாமியனாய் வாழ்ந்திட. என்ன செய்தாய்… அட என்ன தான் செய்யப் போகிறாய்… மனிதனாய் வாழ்ந்திட!!!

அடையாள அட்டை!

உணர்வுப்பூர்வமான அடையாளங்களை தொலைத்துவிட்டு… உயிரில்லாத அட்டைகளை கொண்டு அலைகிறோம்… மனிதர்களாய் இல்லை… வெறும் மண் பொம்மைகளாய்… இதெல்லாம்… பெரும் உண்மைகளை நிரூபிக்க அல்ல… நம்மை நாமே நிரூபித்துக் கொள்ளவே!!!

உன்னாலே… உன்னாலே…

என் பொழுது விடிந்தது – நீ தூக்கம் களைந்து சோம்பல் முறித்த போது தான். என் கண்ணில் வெளிச்சம் தெரிந்தது – உன் விழிப் பார்வை என் மேல் கொஞ்சம் விழுந்த போது தான். என்னுள்ளே புத்துணர்வும் பூத்தது – உன் அழகு மேனி குளிர் நீர் துளிகளை சுமந்த போது தான். எனக்கு தாகம் எடுத்தது – உன் நுனி நாக்கும் தேநீர் ருசித்த போது தான். எனக்குள் இருந்த பசியும் புரிந்தது – உன் செவ்விதழ்கள் […]

கதை சொல்லப் போறேன்…!

ஒரு சிறுகதை எழுதனும்னு ரொம்ப நாட்களா எனக்கு ஆசை. ஆனால் அதற்கான சந்தர்பம் எனக்கு உருவாகவில்லை. உருவாக்கிக்கொள்ளவில்லை என்று சொல்வது தான் உத்தமம். இன்று என் நீண்ட நாள் ஆசைக்கு உயிர் கொடுக்க நினைத்து ஒரு கதை எழுத ஆரம்பித்தேன்.  ஆனால் எப்படி ஆரம்பிப்பது, எங்கே ஆரம்பிப்பது என்று புரியவில்லை.  உண்மைய சொல்லனும்னா தெரியவில்லை. அப்படியே கொஞ்சம் யோசித்த போது எப்போதோ நான் படித்த ஒரு கவிதை நியாபகத்திற்கு வந்தது.முழுக் கவிதை நினைவில் இல்லை. ஆனால் அதன் […]

முற்போக்கான மாற்றம்..!

‘மாறுகிறேன் நான்’ என்ற இந்தப் பக்கத்தில் எழுத நினைத்த இதை இன்று தன் எழுத முடிந்தது. அவ்வளவு busyனு பொய் எல்லா சொல்ல மாட்டேன்.என்னுடைய சோம்பேறித்தனம் என்று கூட எடுத்துக் கொள்ளலாம்.ஆனால் இன்று கண்டிப்பாக எழுத வேண்டும் என்று முடிவு செய்து விட்டு தான் எழுத ஆரம்பித்தேன். ஒவ்வொரு சனிக் கிழமையும் நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலுக்கு போகும்போது, அங்க நெய் வாங்கி, அங்குள்ள பெரிய விளக்கில் ஊற்றுவது என் வழக்கம். எப்படி அந்த பழக்கம் எனக்கு வந்தது […]

மாறுகிறேன் நான்..!

“மாற்றம்” – பலர் இதை ஒரு சாதாரண சொல்லாகவே நினைக்கிறார்கள்.ஆனால் நான் இதை ஒரு சாதரண சொல் என்றே சொல்ல மாட்டேன்.எல்லோருடைய வாழ்கையிலும் தன் இடத்தை பதித்துள்ள ஒரு அசாத்திய மந்திர சொல் என்றே சொல்லுவேன். நேற்று..இன்று.. நாளை..என்று மூன்று காலங்களிலும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் ஒன்று தான் இது.மாற்றம் என்ற ஒன்று மட்டும் இல்லை என்றால் இந்த உலகமே அர்த்தமற்றதாகிவிடும்;இவ்வளவு தான் வாழ்க்கையா என்று ஒரு சலிப்பு வந்து விடும்.எனவே தான் இந்த மாற்றம் மட்டும் […]