மயக்கம் என்ன ?!?

  ஏதோ இனம் புரியா தாக்கம் என்னுள்- உன் பிம்பம் என் விழிகளில் விழுந்திடும் பொழுது.    ஏதேதோ எழ முடியா ஏக்கம் என்னுள் – உன் கை விரல் உனையரியாமல் என்னை தீண்டிடும் பொழுது.    ஏதோ மீள முடியா கிறக்கம் என்னுள்- உன் செவ்விதழ் மொழியும் தமிழ் கேட்டிடும் பொழுது.   ஏதேதோ மறைக்க முடியா நடுக்கம் என்னுள் – உன் நிழல் கூட என்னை நெருங்கிடும் பொழுது.   ஏதோ விளக்க முடியா கலக்கம் […]