மயக்கம் என்ன ?!?

  ஏதோ இனம் புரியா தாக்கம் என்னுள்- உன் பிம்பம் என் விழிகளில் விழுந்திடும் பொழுது.    ஏதேதோ எழ முடியா ஏக்கம் என்னுள் – உன் கை விரல் உனையரியாமல் என்னை தீண்டிடும் பொழுது.    ஏதோ மீள முடியா கிறக்கம் என்னுள்- உன் செவ்விதழ் மொழியும் தமிழ் கேட்டிடும் பொழுது.   ஏதேதோ மறைக்க முடியா நடுக்கம் என்னுள் – உன் நிழல் கூட என்னை நெருங்கிடும் பொழுது.   ஏதோ விளக்க முடியா கலக்கம் […]

கிருக்கோவியாங்கள்

  உலகிற்கு மட்டும் ஏன் வெறும் கிறுக்கல்களாய் தெரிகிரதடி?!?! கசக்கிய காகிதத்தில் நீ உன் புது பேனாவால் வடித்தெரிந்த அழகோவியங்கள் எல்லாம்!!!

காதல்

பணம் பார்த்து வருவது இல்லை – பாசமுள்ள மனம் பார்த்து வருவதே காதல்.   நிறம் பார்த்து வருவது இல்லை – நேசமுள்ள நெஞ்சம் பார்த்து வருவதே காதல்.   உருவம் பார்த்து வருவது இல்லை – உயிருள்ள உணர்வுகள் பார்த்து வருவதே காதல்.   தரம் பார்த்து வருவது இல்லை – தயக்கமில்லா தைரியம் பார்த்து வருவதே காதல்.   இனம் பார்த்து வருவது இல்லை – ஈரமுள்ள இதயம் பார்த்து வருவதே காதல்.   மதம் […]

இனிப்புக் கடை

எனக்கு உனக்கு என அடிபிடி சண்டை ஒருபுறம்.   எடுப்பதும் கொடுப்பதுமாய் கல்லா நிறைவதோ மறுபுறம்.   பேர் சொல்லும் வெற்றியை பெற்ற மகிழ்ச்சி – பையை பெற்றவனுக்கு.   பேரழகியே தன்னை விட்டுச் சென்ற ஏமாற்றம் – கிடைக்காமல் நின்றவனுக்கு.   போட்டி என்னமோ வெறும் அரையொரு மணிகளே, போட்டியிடும் தலைகள் என்னமோ பற்பலவே.   படித்துப் பார்க்க பெயர் பலகையோ, கணக்குப் போடா மின் கணினியோ இல்லை தான்.   ஆனால்,   நினைத்துப் […]