கிருக்கோவியாங்கள்

  உலகிற்கு மட்டும் ஏன் வெறும் கிறுக்கல்களாய் தெரிகிரதடி?!?! கசக்கிய காகிதத்தில் நீ உன் புது பேனாவால் வடித்தெரிந்த அழகோவியங்கள் எல்லாம்!!!

காதல்

பணம் பார்த்து வருவது இல்லை – பாசமுள்ள மனம் பார்த்து வருவதே காதல்.   நிறம் பார்த்து வருவது இல்லை – நேசமுள்ள நெஞ்சம் பார்த்து வருவதே காதல்.   உருவம் பார்த்து வருவது இல்லை – உயிருள்ள உணர்வுகள் பார்த்து வருவதே காதல்.   தரம் பார்த்து வருவது இல்லை – தயக்கமில்லா தைரியம் பார்த்து வருவதே காதல்.   இனம் பார்த்து வருவது இல்லை – ஈரமுள்ள இதயம் பார்த்து வருவதே காதல்.   மதம் […]

அஞ்சலிடாத அஞ்சல்கள்!!!

Hey Friends… Hope all are fine… It’s very long time since I posted something here… Not that much busy… but haven’t got a thought to write something… but now here with some random scribbles that I call as ‘poem’ myself…  காணாமல் போனேன் உன் இரு கரு விழிகளில், காத்திருந்த்தே நொந்தேன் நீ தினம் வரும் வழிகளில்.   இன்னிசையாய் லயித்தேன் […]

காதல் காலாவதி!

என் முகம் நீ பார்த்ததில்லையே என்றேன் உன் அகம் பார்த்திறுக்கின்றேனே என்றாய்.   என் குரல் நீ கேட்டதில்லையே என்றேன். உன் குணம் தெரிந்திருக்கின்றேனே என்றாய்.   என் நிறம் நீ அறிந்ததில்லையே என்றேன் உன் நினைவிலேயே அலைகிறேனே என்றாய்.   இருதியாய்   என் விருப்பத்தை நீ விரும்பவில்லையா என்றாய் உன் செவி சேர்ந்திட மௌனமே கொண்டுள்ளேன் என்றேன்.   ஆனால்   இம்மௌனம் சம்மதம் சொல்வதற்கில்லை! உன் காதல் பயணத்தை முடித்திடவே!

எத்தனை நாள் காத்திருப்பேனோ?!?!

எத்தனை நாள் காத்திருந்தேன் – உன் விழிப் பார்வை என் மேல் விழுந்திட! எத்தனை நாள் காத்திருந்தேன் – உன் கை விரல்கள் என்னை தீண்டிட! எத்தனை நாள் காத்திருந்தேன் – உன் இதழால் என் இதழை உரசிட! எத்தனை நாள் காத்திருந்தேன் – உன் தேகம் அணைத்து உறங்கிட! இன்னும்… எத்தனை நாள் காத்திருப்பேன் – உன் செவிதழ்கள் அம்மா என்றெனை அழைத்திட!

காணவில்லை!!!

விபூதிப் பட்டையும் குங்குமப் பொட்டையும் இட்டுக் கொண்டாய், இந்துவாய் வாழ்ந்திட. இயேசுவின் சிலுவையையும் கழுத்தில் சுமந்து நடந்தாய், கிருத்துவனாய் வாழ்ந்திட. தலையில் குல்லாவும் முகத்தில் தாடியும் வைத்துக் கொண்டாய், இஸ்லாமியனாய் வாழ்ந்திட. என்ன செய்தாய்… அட என்ன தான் செய்யப் போகிறாய்… மனிதனாய் வாழ்ந்திட!!!