அறம் என்பது யாதெனில்…

அறம். உயிரெழுத்துகளின் முதல் எழுத்துடன் தொடங்கும் அழகிய தமிழ்ச் சொல். அழகிய சொல் மட்டுமின்றி நம் வாழ்வியலில் மிக ஆளுமை கொண்ட சொல்லுமாகும். சிறு வயதில் ஒளவையாரின் ‘அறம் செய்ய விரும்பு’ என்ற ஆத்திச்சுடி வரி தான் இந்த சொல்லை எனக்கு முதன் முதல் அறிமுகப்படுத்தி வைத்திருக்க வேண்டும். ஆனால் கடந்த சில வருடங்களாக இச்சொல் என்னை மிகவும் ஆட்க்கொள்ளத் தொடங்கியது. இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. இந்தக் காரணத்தை அறிந்துகொள்ள முயலும்பொழுது கிடைத்த புரிதல்களையே […]

ஆராரோ ஆரிரரோ…

ஆராரோ ஆரிரரோ…  ஆரிரரோ ஆராரோ …   கண்மணியே நீ கண்ணுறங்கு… பாலூட்ட சோறூட்ட உன் தாயும் அவள் இங்கிருக்க… கண்மணியே நீ கண்ணுறங்கு… ஆராரோ ஆரிரரோ…  ஆரிரரோ ஆராரோ … பாராட்ட சீறாட்ட தந்தையும் நான் வந்திருக்க… கண்மணியே நீ கண்ணுறங்கு… ஆராரோ ஆரிரரோ…  ஆரிரரோ ஆராரோ … சின்ன கால்கள் ரெண்டும் குதித்திட பிஞ்சு கைகள் ரெண்டும் வட்டமிட நேரமில்லை நேரமில்லை…. இது நீ கண்ணுறங்கும் நேரமடி…. ஆராரோ ஆரிரரோ…  ஆரிரரோ ஆராரோ … […]

மயக்கம் என்ன ?!?

  ஏதோ இனம் புரியா தாக்கம் என்னுள்- உன் பிம்பம் என் விழிகளில் விழுந்திடும் பொழுது.    ஏதேதோ எழ முடியா ஏக்கம் என்னுள் – உன் கை விரல் உனையரியாமல் என்னை தீண்டிடும் பொழுது.    ஏதோ மீள முடியா கிறக்கம் என்னுள்- உன் செவ்விதழ் மொழியும் தமிழ் கேட்டிடும் பொழுது.   ஏதேதோ மறைக்க முடியா நடுக்கம் என்னுள் – உன் நிழல் கூட என்னை நெருங்கிடும் பொழுது.   ஏதோ விளக்க முடியா கலக்கம் […]

கிருக்கோவியாங்கள்

  உலகிற்கு மட்டும் ஏன் வெறும் கிறுக்கல்களாய் தெரிகிரதடி?!?! கசக்கிய காகிதத்தில் நீ உன் புது பேனாவால் வடித்தெரிந்த அழகோவியங்கள் எல்லாம்!!!

காதல்

பணம் பார்த்து வருவது இல்லை – பாசமுள்ள மனம் பார்த்து வருவதே காதல்.   நிறம் பார்த்து வருவது இல்லை – நேசமுள்ள நெஞ்சம் பார்த்து வருவதே காதல்.   உருவம் பார்த்து வருவது இல்லை – உயிருள்ள உணர்வுகள் பார்த்து வருவதே காதல்.   தரம் பார்த்து வருவது இல்லை – தயக்கமில்லா தைரியம் பார்த்து வருவதே காதல்.   இனம் பார்த்து வருவது இல்லை – ஈரமுள்ள இதயம் பார்த்து வருவதே காதல்.   மதம் […]