மயக்கம் என்ன ?!?

 

ஏதோ இனம் புரியா தாக்கம் என்னுள்- உன்

பிம்பம் என் விழிகளில் விழுந்திடும் பொழுது.

 

 ஏதேதோ எழ முடியா ஏக்கம் என்னுள் – உன்

கை விரல் உனையரியாமல் என்னை தீண்டிடும் பொழுது.

 

 ஏதோ மீ முடியா கிறக்கம் என்னுள்- உன்

செவ்விதழ் மொழியும் தமிழ் கேட்டிடும் பொழுது.

 

ஏதேதோ மறைக்க முடியா நடுக்கம் என்னுள் – உன்

நிழல் கூட என்னை நெருங்கிடும் பொழுது.

 

ஏதோ விளக்க முடியா கலக்கம் என்னுள் – தன்

நட்பினை இன்னொருவன் உன்னிடம் பகிர்ந்திடும் பொழுது.

 

ஏதேதோ தடுக்க முடியா தயக்கம் என்னுள் – என்

மனதினை உன் வசம் சொல்லிட வரும் பொழுது.

 

அடியே… அழகே… ஆருயிரே…

இத்தனை இத்தனை மாற்றம் செய்தாயே என்னுள் நீ

துளியும் உன்னை அறியாமலே!!!

 

இதை… இதை தான் தமிழும் சொல்லுமோ

காதல் மயக்கம் என்று?!?!?

Advertisements

4 thoughts on “மயக்கம் என்ன ?!?

  1. ” ஏதேதோ எழ முடியா ஏக்கம் என்னுள் – உன்

    கை விரல் உனையரியாமல் என்னை தீண்டிடும் பொழுது.”

    Words of Soothing Love, Thanks for Posting it Bala 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s