காதல்

பணம் பார்த்து வருவது இல்லை – பாசமுள்ள

மனம் பார்த்து வருவதே காதல்.

 

நிறம் பார்த்து வருவது இல்லை – நேசமுள்ள

நெஞ்சம் பார்த்து வருவதே காதல்.

 

உருவம் பார்த்து வருவது இல்லை – உயிருள்ள

உணர்வுகள் பார்த்து வருவதே காதல்.

 

தரம் பார்த்து வருவது இல்லை – தயக்கமில்லா

தைரியம் பார்த்து வருவதே காதல்.

 

இனம் பார்த்து வருவது இல்லை – ஈரமுள்ள

இதயம் பார்த்து வருவதே காதல்.

 

மதம் பார்த்து வருவது இல்லை – மரணமில்லா

மனிதம் பார்த்து வருவதே காதல்.

 

முடிக்கவில்லை இன்னும்…

 

காரணம் இல்லாமல்.. காரியமேதும் இல்லாமல்…

கள்ளங்கபடம் துளி கூட இல்லாமல்…

 

கோடி மின்னலாய்… கொள்ளை மலராய்… கோயில் தீபமாய்…

 

கண்ணிமைக்கும் நொடியினில்… வந்திறங்குவதும் கூட…

உன்னதமான காதலே

Advertisements

4 thoughts on “காதல்

  1. //மதம் பார்த்து வருவது இல்லை – மரணமில்லா

    மனிதம் பார்த்து வருவதே காதல்// – Nice one 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s