உன்னாலே… உன்னாலே…

marry2

என் பொழுது விடிந்தது – நீ
தூக்கம் களைந்து சோம்பல் முறித்த போது தான்.

என் கண்ணில் வெளிச்சம் தெரிந்தது – உன்
விழிப் பார்வை என் மேல் கொஞ்சம் விழுந்த போது தான்.

என்னுள்ளே புத்துணர்வும் பூத்தது – உன்
அழகு மேனி குளிர் நீர் துளிகளை சுமந்த போது தான்.

எனக்கு தாகம் எடுத்தது – உன்
நுனி நாக்கும் தேநீர் ருசித்த போது தான்.

எனக்குள் இருந்த பசியும் புரிந்தது – உன்
செவ்விதழ்கள் கொஞ்சம் அன்னம் பருகிய போது தான்.

இப்படி சொல்லிக்கொண்டே போகலாமடி…
சுருங்கச் சொன்னால்…

நான் இன்னும் உயிர் வாழ்வது – உன்
சுவாசமும் கொஞ்சம் என் மூச்சில் கலந்திருப்பதால் தான்.

இப்படி.. உன்னாலே… உனக்காகவே…
நித்தம் வாழ்ந்து கொண்டிருக்கும் என்னை

மேளமும் நாதமும் கலந்திட்ட மலர் மேடையில்
எப்போது  மணப்பாயடி ???!

Advertisements

6 thoughts on “உன்னாலே… உன்னாலே…

 1. Atlast a positive ending Love poem from u without any “feelings” like:
  உன் மணமமேடை என் மரணமேடை ஆனது, உன் மலர்மாலை எனக்கு மலர்வளையம் ஆனது kinda lines.

  Quite romantic which reminds me Thabu Shankar’s poetic lines.

 2. Cute poem…
  நான் இன்னும் உயிர் வாழ்வது – உன்
  சுவாசமும் கொஞ்சம் என் மூச்சில் கலந்திருப்பதால் தான்.

  Line super… vara lovvu kavithai mattum thaan eluthure… enna aachi???

  1. @Arun…
   Thanks da !

   itha pathi than easya ezhuthalam… thats y writing on this topic…
   mathapadi elllam onnum aagala da…
   chumma namma karpanai kuthiraiyai appadiye killapi vittathula vantha kavithai than…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s