நெய்வேத்தியம் !!!

‘அம்மா… பட்டாசு பாக்ஸ் எங்கம்மா வச்சிருக்கீங்க??’ ,என்று கேட்டுக்கொண்டே சமையலறை பக்கம் வந்தான் சிவா.

பள்ளிக்கூடம் இருக்கும்போது எழுப்பிவிட்டால் கூட ஏழு மணி வரைக்கும் தூங்கும் இவன் இன்னைக்கு அதிகாலை 5 மணிக்கே எழுந்து விட்டான். அதுவும் யாரும் எழுப்பி விடாமல்… எனென்றால் இன்று தீபாவளி திருநாள். தினமும் எழுப்பி விடும் அம்மாவின் குரலை விட அன்று கேட்ட பட்டாசு சத்தங்கள் UKG படிக்கும் இந்தச் சுட்டிக் குட்டிப் பையனை சுறுசுறுப்பாக எழுப்பிவிட்டிருந்தது.

பதில் ஏதும் வராததால் சமையலறைக்குள் நுழைந்தான்.

எங்க அம்மா வச்சிருக்கீங்க???

‘இருப்பா.. நான் வந்து எடுத்து தரேன்… அது வரைக்கும் கொஞ்ச நேரம் போய் தூங்கு மா…’, என்று சொன்னாள் பலகாரம் செய்து கொண்டிருந்த அவன் அம்மா கமலா.

அது வரைக்கும் பொறுக்க முடியாத சிவா உடனே வேண்டும் என்று அடம் பிடிக்க ஆரம்பித்தான்.

‘கண்ணா… சாமி கும்பிட்ட பிறகு யாராவது பெரியவுங்க கூட தான் பட்டாசு வெடிக்கனும்… இல்லாட்டி சாமி கண்ண குத்திடும்’னு, ஒரு கதைய சொல்லி முடித்தாள் கமலா.

சிவா என்ன சொன்னாலும் கேட்க மாட்டான். ஆனால் சாமி கண்ணா குத்திடும் என்று சொன்னா மட்டும் உடனே கேட்டுக்கொள்வான். இது சாமி மேல் கொண்ட பயத்தினாலா, இல்ல பக்தியினாலா என்று தெரியவில்லை. இதை பற்றி அவன் பெற்றோர்களும் கண்டுகொள்ள வில்லை. அப்போதைக்கு அவன் சொன்ன பேச்சு கேட்டால் போதும் என்று நினைத்தார்கள். நம்மில் கூட பல பேர் இந்த குழந்தையை போல பக்தி இல்லாவிட்டால் கூட பயத்தினால் தப்புகள் செய்யாமல் இருக்கிறோம். சிவாவுடன் கதை பேசிக்கொண்டே பலகாரம் அனைத்தையும் செய்து முடித்துவிட்டு, இருவரும் எண்ணெய் தேய்த்து தலைக்கு குளித்துவிட்டு பூஜைக்கு ரெடி ஆனார்கள்.

தீபாவளிப் புத்தாடைகள் அனைத்தையும் பூஜை அறையில் வைத்தாள் கமலா. செய்த பலகாரங்கள் ஒவ்வொன்றிலும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து பூஜை அறையில் இருந்த தட்டின் மேல் உள்ள வாழை இலையில் வைத்த கமலாவை பார்த்த சிவா,

‘ஏன்ம்மா பலகாரத்த இங்க வைக்கிறீங்க ? என்று கேட்டான்.

இப்படி பல நேரம் சின்ன குழந்தைகள் கேட்கும் கேள்விகள் ரொம்ப புத்திசாலி தனமாகவே இருக்கும்.

உடனே, ‘இது சாமி சாப்பிட மா’, என்று பதிலளித்தாள் கமலா.

சிவாவின் அப்பா குளித்து விட்டு வரும் வரைக்கும் கமலாவும் சிவாவும் தொலைக்காட்சியில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஒரு கோயிலில் சாமிக்கு நடக்கும் அபிஷேகங்களையும், அதற்கு பின் சாமிக்கு இனிப்புகளை படையல் செய்வதையும் ஒளிபரப்பிக்கொண்டிருந்தர்கள்.

அதைப் பார்த்த சிவா, ‘இதுவும் சாமி சாப்பிடவா மா?’ என்று கேட்டான்.

‘ஆமாம் டா’ என்றாள் கமலா.

அந்த சாமியும் நம்ம வீட்டுல இருக்கிற சாமியும் ஒண்ணா மா ?

ஆமாம் பா.. வீட்லயும் கோயில்லையும் இருக்கிற எல்லா சாமியும் ஒன்னு தான் டா..

இப்படி இவர்கள் பேசிக்கொண்டிருக்க,வெளியே இருந்து யாரோ கூப்பிடுகிற சத்தம் கேட்டது.இதை கேட்டு வெளியே ஓடின சிவா ஒரு பிச்சைக்காரர் நிற்பதை பார்த்தான். பின்னால் வந்து பார்த்த கமலா, ‘இப்ப ஒன்னும் இல்லைங்க… அப்பறம் வாங்க…’ என்று சொல்லி விட்டு சிவாவை உள்ளே அழைத்துச் சென்றாள்.

“அம்மா.. அதான் நம்ம வீட்ல பலகாரம் இருக்குல.. அதக் கொஞ்சம் குடுக்கலாமில்ல மா… ” – என்று சொன்னான் உள்ளே வந்த சிவா.

“பூஜை முடிஞ்சு சாமி சாப்பிட்ட அப்பறம் தான் நம்ம எல்லாம் சாப்பிடனும் ” – என்று சொன்ன கமலா கணவன் குரல் கேட்டு உள்ளே சென்றாள்.

திரும்பவும் வெளியே வந்து பார்த்தான் சிவா. அந்த பிச்சைக்காரர் ஒரு மரத்தடி நிழலில் படுத்திருந்தார். அவரிடம் இருந்த சோர்வு சிவாவின் மனதில் பரிதாபத்தை விதைத்து. உடனே உள்ளே ஓடினான். பூஜை அறைக்குள் நுழைந்தான். அங்கே சாமிக்கு படைக்க வைத்திருந்த பலகாரங்களை எடுத்துக் கொண்டு வெளியே போய் அந்த பிச்சைக்காரரின் பாத்திரத்தில் போட்டான். அதை எடுத்து ஒரு வாய் சாப்பிட்டு விட்டு…

‘நீ நல்ல இருக்கனும்பா’, என்று வாழ்த்தினார் அந்த பிச்சைக்காரர்.

‘தேங்க்ஸ் அங்கிள்’ என்று சொல்லி விட்டு வீட்டுக்குள் ஓடி வந்தான் சிவா. அவன் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம் மலர்ந்திருந்தது.

சிவா கையில் இருந்த காலியான தட்டை பார்த்த கமலாவிற்கு கோபம் வந்தது.

என்னடா பண்ணிட்டு வர? – என்று கேட்டாள் கமலா.

‘அந்த beggar அங்கிள்க்கு பலகாரம் குடுத்திட்டு வரேன்னும்மா’, என்று சிவா சொல்ல, கோபத்தில் கமலா ஒரு அடி கொடுக்கிறாள்.

ஒரு சொன்ன பேச்சாவது கேக்கிறியா நீ என்று கமலா திட்ட, சிவாவின் அப்பா வந்து என்ன என்று விசாரிக்கிறார்.அப்பொழுது கமலா நடந்ததை சொல்ல,

அப்படியா கண்ணா??? என்று சிவாவிடம் கேட்கிறார். சிவாவும் ஆமாம் என்று தலையாட்டுகிறான்.

உடனே சிவாவை தூக்கி, இனிமே இத மாறி தப்பு செய்ய கூடாது பா என்ன… அப்பறம் சாமி கண்ண குத்திடும் என்று சொல்கிறார்…

உடனே பாவமான குரலில் சிவா, ‘சாமிக்கு தான் டிவில காமிச்ச அந்த கோயில மாறி எத்தன கோயில்ல அபிஷேகம் பண்ணிருப்பாங்க… பலகாரம் வச்சிருப்பாங்க. அதெல்லாம் சாப்பிட்டாலே சாமிக்கு வயிறு நிரந்ஜிரும்… ஆனா பாவம் அந்த பெக்கர் அங்கிள்…. யாரும் அவருக்கு இப்படி பலகாரம் குடுக்க மாட்டங்க… அதனால தான் பா நான் எடுத்து குடுத்தேன்…’, என்று தன் மழழை மாறாத குரலில் சொன்னான்.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த கமலா, ஓடி வந்து சிவாவை தூக்கி கட்டிப் பிடிச்சு ஒரு முத்த மழையையே கொட்டினாள். சிவாவை கொஞ்ச கொஞ்ச, கமலாவின் கண்கள் பனித்தது.

Advertisements

14 thoughts on “நெய்வேத்தியம் !!!

 1. “சாமிக்கு தான் டிவில காமிச்ச அந்த கோயில மாறி எத்தன கோயில்ல அபிஷேகம் பண்ணிருப்பாங்க… பலகாரம் வச்சிருப்பாங்க. அதெல்லாம் சாப்பிட்டாலே சாமிக்கு வயிறு நிரந்ஜிரும்”——:-). Nice thought!! Remembered Bharathiar……Sometimes, children teach us great lessons in simple terms…..But sadly, the freshness in childhood is spoiled by threatenings like — “அப்பறம் சாமி கண்ண குத்திடும்”………..Good story……..

 2. natpu chance a illa da orey feelings poo…… nice story da… unakul erukara thiramai palla payruku theriyamey pochu pooo……

 3. Not that,Raja, just meant to say the creativity and curiosity that childhood bubbles up with, is curbed by such illogical statements….
  By the way, I don’t agree with your statement—“but always never think of the good ones told by them”—no,we do remember.Did we not remember, we wouldn’t have been this disciplined, this educated, this humane………what u say?

  1. @Savitha
   I may be wrong… but not fully I think so…
   We do remember… but manytimes we are not spreading out the good things as actively as we do the bad ones…

 4. touching story boss..i always remember an old man in triplicane area who had nothing but a dhoti and walking stick as his possession..congrats on yr good blog buddy…

 5. Bala, did u get inspired from the movie “Abhiyum Naanum”?

  One kind advice: Please dont watch Vikraman movies…

  Jokes apart, it’s a good STORY!

  1. @Kaarthik…
   Thanks da…
   this is not a story from inspiration da… I got to remember the scene from ‘Abhiyum Naanum’ after heariing from u…
   Old Vikraman movies are good…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s