பயணம்..! – நான் எழுதிய முதல் குட்டிக் கதை.

ஊரெங்கும் தண்ணீர். பார்க்கும் இடமெல்லாம் வெள்ளம். தண்ணீர் இல்லாமல் தவித்த வீதிகள் எல்லாம் இப்போ தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தன. தாழ்வான வீடுகளெல்லாம் தண்ணீர் தொட்டிகளாக மாறியிருந்தன. இதற்கெல்லாம் காரணம் இருண்டு நாட்களாக தொடர்ந்து பெய்த அடை மழை. சாலை ஓரங்களில் தங்கள் பிழைப்பை நடத்தும் மக்கள் எப்படா இந்த பாழாப்போன மழை நிற்கும் என காத்துக்க் கொண்டிருந்தார்கள்.

இப்படி ஒரு புறம் மக்கள் மழையை திட்டிகொண்டிருக்க,குழந்தைகளும், மாணவ மாணவிககளும் சந்தோஷத்தில் மூழ்கியிருந்தார்கள்.அவர்கள் சந்தோசத்திற்கு காரணம் அரசு அறிவித்த இன்னும் இரண்டு நாட்கள் விடுமுறை! யார் பக்கம் சாய்வது என்று தெரியாமல் குழம்பிய மழை பெரிதாக பெய்யாமலும், முழுவதுமாக நிற்காமலும் இரட்டை வேடம் போட்டுக்கொண்டிருந்தது.

இரண்டு நாட்களாக கம்ப்யூட்டர், டிவி என்று மாறி மாறி படம் பார்த்து சலித்த ஆனந்த்,மழை கொஞ்சம் குறைந்ததனால் வெளியே கிளம்ப முடிவெடுத்தான். இன்னும் ஒரு மணி நேரத்தில் அங்கே இருப்பேன் டா என்று தன் நண்பனுக்கு எஸ்.எம்.எஸ் செய்து கொண்டே வீஎட்டை வீட்டு கிளம்பினான். சிறுவர்கள் தங்கள் வீட்டின் முன் தேங்கியிருந்த தண்ணீரில் கப்பல் விட்டு விளையாடிக் கொண்டிருந்ததை பார்த்து நாமும் அப்படியே இருந்திருக்க கூடாதா என்று பொறாமை பட்டுக்கொண்டே ரயில் நிலையம் நோக்கி நடந்து கொண்டிருந்தான்.

நீளமான மக்கள் வரிசை இருக்கும் ரயில் நிலையம் காற்று வாங்கிக்கொண்டிருந்தது. டிக்கெட் வாங்கிட்டு உள்ளே போக,ரயிலும் வந்து நின்றது. ரயிலில் எரிய ஆனந்த் எப்போதும் மோகம் குறையாத ஜன்னல் சீட்டை தேடிப் போய் அமர்ந்தான். தண்ணீரே பாத்திராத அவனுடைய ஜீன்ஸ் மேல் சாரல் துளிகள் விழுந்திட, ஜன்னல் கண்ணாடியை மட்டும் மூடிவிட்டு, தன் மொபைல் போன் ரேடியோவில் பாட்டு கேட்க ஆரம்பித்தான்.

வெளியே பெய்யும் மழையோடு ரேடியோவில் இளையராஜாவின் இசை மழையும் சேர்ந்து அவன் கண்களை மெதுவாக மூடச் செய்தது. அடுத்தடுத்த ஸ்டேஷனில் சில பேர் ஆனந்த் இருந்த ரயில் பெட்டியில் ஏறினார்கள். திடீரென்று தன் தலை முடியை யாரோ இழுப்பது போல உணர்ந்து திரும்ப, தன் பின் சீட்டில் அமர்ந்திருந்த பெண்ணின் தோளில் இருந்த குழந்தை அவன் முடியோடு விளையாடிக்கொண்டிருப்பதை பார்த்தான்.

கொஞ்ச நேரம் பொறுத்துக்கொண்ட ஆனந்த், வலி தாங்க முடியாமல் அந்த குழந்தையின் கையை எடுக்க முயலும்போது அந்த பெண்ணும் தன் குழந்தை செய்வதை உணர்ந்து தடுக்க முயன்றாள். அந்த நொடி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தார்கள்.இருவரின் முகத்திலும் ஒரு அதிர்ச்சி கலந்த புன்னகை பூத்தது.

ஆனந்த் கேட்டான்.. எப்படி இருக்கீங்க அஞ்சலி ?

நல்ல இருக்கேன். நீங்க?? – அவளிடமிரிந்து வந்தது.

நானும் நல்லா இருக்கேன் – ஆனந்த் சொன்னான்.

பிறகு சில நொடிகள் அவர்களின் மௌனங்கள் மட்டுமே பேசிக்கொள்ள,அஞ்சலியிடம் இருந்த குழந்தை வந்து அவனுடைய கையை பிடித்தது.

மௌனம் களைந்து ஆனந்த் கேட்டான் – உங்க குழந்தையா? என்ன பேரு ?

ஆமா ஆனந்த். என்னோட குழந்தை தான். பேரு அருண். – என்று அஞ்சலி சொன்னாள்.

என்ன பேசுவதென்று தெரியாமல் இருவரும் மறுபடியும் அவரவர் மௌனக்கூண்டிற்குள் நுழைந்தார்கள். அப்போது இன்னொரு பக்கத்து சீட்டில் உக்கார்ந்திருந்த ஒரு காதல் ஜோடி ஒருத்தருக்கொருத்தார் “நீ இல்லாத ஒரு வாழ்க்கையை நினைச்சு கூட பாக்க முடிலடா…” என்று பேசிக்கொண்டிருந்தார்கள். அதைக் கேட்ட ஆனந்தும் அஞ்சலியும் ஒரு சோகம் கலந்த சிரிப்பை பரிமாறிகொன்டார்கள்.அடுத்த சில நொடிகளில் அவள் ஸ்டேஷன் வர, சிறு புன்னகையுடன் விடை பெற்றுச் சென்றாள் அஞ்சலி.

அந்த ஸ்டேஷனில் இருந்து ரயில் கிளம்பியது. கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்த ஆனந்தின் பார்வையில் இருந்து அஞ்சலி மறைய மறைய,இருவரும் அதே சிறு சோகம் கலந்த புன்னகையுடன்,”யார் இல்லாவிட்டாலும் யாரும் வாழ முடியுமென சில வருடங்களில் மௌனமாய் சொல்லிக்கொடுக்குமே காலம்..!” என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டு, அடுத்தடுத்த நொடிகளில் நடக்கப் போகும் அதிசியங்களை அனுபவிக்க தங்கள் வாழ்க்கைப் பயணத்தை தொடர்ந்தார்கள்.

Advertisements

22 thoughts on “பயணம்..! – நான் எழுதிய முதல் குட்டிக் கதை.

 1. excellent write rajus…
  loved it very much…very poignant n touching…n practical…
  the narration was superb…

  en perai hero pera potruka koodatha?? kulantha pera thaan podanuma??? 🙂

  but i didnt like the way they talked..they were formal…”epadi iruka?” wud have been nice….

  1. @Arun

   Thanks da…
   இந்த வரிகள் முழுதாக என்னுடையது இல்ல… இந்த அர்த்தமுள்ள கவிதை எங்கேயோ படித்திருக்கிறேன் da…
   I intentionally wrote those formal talkings da…
   The seperation made them to treat each other beyind informal da… as it had been shown in kkhh…

 2. ”யார் இல்லாவிட்டாலும் யாரும் வாழ முடியுமென சில வருடங்களில் மௌனமாய் சொல்லிக்கொடுக்குமே காலம்..!”

  Nice cliche!!And a good try……

  1. @Savitha

   Akka… Thanks for ur compliments…
   இந்த வரிகள் முழுதாக என்னுடையது இல்ல… இந்த அர்த்தமுள்ள கவிதை எங்கேயோ படித்திருக்கிறேன்…

  1. @Kaarthik

   Ithu verum karpanai kathai da…
   ithil varum anaithhu kathaa paathirangalum karpanaye….
   Yaarodum sammantha pattal naan poruppu alla….

 3. Wowwwwwwwww what a creative story it is!!! I’ve tried hard to read in Tamil and atlast understood everything except the sentence u said in quotation maks in the end. Cud u pls translate that to English??? Anyway,Soooooooooo I ‘ve missed many topics in ur blog,Bala. I’ll no longer miss them.Have a great day.Happy blogging……………

  1. @Satheesh
   Thanks for ur compliments Satheesh…
   Its english meaning is – The time will silently teach us the fact that anyone can live even if they lose anyone close to them.

   @Vicchu
   Yes da. It’s an inspiration from a poetry that I read a long back.
   fyi… It’s a story, but not happened to me da… 🙂

 4. Looks like u got inspired from somewhere…!!!!
  Does that happened to u recently..??? Jus kidding…. 😉

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s