முற்போக்கான மாற்றம்..!

‘மாறுகிறேன் நான்’ என்ற இந்தப் பக்கத்தில் எழுத நினைத்த இதை இன்று தன் எழுத முடிந்தது. அவ்வளவு busyனு பொய் எல்லா சொல்ல மாட்டேன்.என்னுடைய சோம்பேறித்தனம் என்று கூட எடுத்துக் கொள்ளலாம்.ஆனால் இன்று கண்டிப்பாக எழுத வேண்டும் என்று முடிவு செய்து விட்டு தான் எழுத ஆரம்பித்தேன்.

ஒவ்வொரு சனிக் கிழமையும் நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலுக்கு போகும்போது, அங்க நெய் வாங்கி, அங்குள்ள பெரிய விளக்கில் ஊற்றுவது என் வழக்கம். எப்படி அந்த பழக்கம் எனக்கு வந்தது என்று எனக்கு தெரியவில்லை. என்னை அறியாமல் என்னோடு கலந்த பழ்ழ்க்கம் என்று நினைக்கிறேன்.அப்படித்தானே அன்றொரு சனிகிழமை காலை கோயிலுக்கு போனேன். ஓரளவு தான் கூட்டம் இருந்தது. கோயில் வாசலில் இருந்தே அந்த அன்பு நிறைந்த ஆஞ்சநேயரின் முகததை பார்த்துக்கொண்டே கோயில்லுக்குள் காலடி எடுத்து வைத்தேன். எப்பொழுதும் போல் உள்ளே நுழைந்த உடன் அங்கு எழுதியிருந்த ‘ஸ்ரீ ராம, ஜெய ராம, ஜெய ஜெய ராம’ என்ற மந்திரத்தை சொல்லிக்கொண்டே கோயில்லுக்குள் நடந்து போனேன்.மூஷிக வாகனம் கொண்ட விநாயகரை தரிசித்து விட்டு, ஸ்ரீ ராமரின் சன்னதிக்கு போகும் பொது தான் திடீரெண்டு ஒரு நினைப்பு தோன்றியது.

இது வரைக்கும் அப்படி நான் நினைத்து இல்லை. ஆனால் அன்று நினைத்தேன்.அங்கே நெய் வாங்குவதற்கு பத்து ரூபாய் கொடுக்க வேண்டும்.அந்த பத்து ரூபாய் செலவு செய்வது ந்யாயமாக படவில்லை.அந்த பத்து ரூபாய் இங்கு போக வேண்டியது இல்ல என்று தோன்றியது. அது சென்று அடைய வேண்டிய கை,வேறொரு இடமாக எனக்கு பட்டது.அப்படி பத்து ரூபாய் கூட இல்லாமல் பலர் கோயிலுக்கு வெளியே பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கையில் அப்படி ரூபாய் பொய் சேர்ந்தால், ஒரு வேலையாவது தங்கள் வயிற்றை முழுதாக இல்லாவிட்டலும், ஓரளவிற்கு நிரப்பிக் கொள்வார்கள். ஆனால் நான் அந்த பாத்து ரூபாயை, விழக்கில் எரியப்போகும் நெய்யிற்கு செலவு செய்து கொண்டிருக்கிறேன். நீ எனக்கு நெய் தீபம் ஏற்றி தான் வழிபட வேண்டும் என்று ஆஞ்சநேயர் என்கிட்டே கேட்கவில்லை. எந்த கடவுளும் இதை செய்து தான் என்னை வழிபட வேண்டும் என்று கேட்பதில்லை.

நாம் மனிதர்களே உருவாக்கிகொண்டது தான் இந்த பழக்கங்களும் சம்பிரதாயங்களும். இதை உடைதேரிவதனால் ஒருத்தர்க்கு நல்லது நடக்குதுனா உடைக்கிரதுல தப்பே இல்ல.கடவுளை வணங்க மனசு இருந்தா போதும்.இந்த பணத்தை இல்லாத ஒருத்தர்க்கு தருகிறாய் என்றல் அந்த கடவுளே வந்தால் கூட தடுக்க மாட்டார். இப்படித்தான் எண்ணங்கள் என்னுள் வந்து போனது.மாறினேன் நானும அன்று. அன்று நான் நெய் விளக்கு வாங்கவில்லை. மாறாக அங்கு எறிந்த தூய்மையான விளக்கின் தீபத்தில் என் அறியாமையை எரித்தேன். இனிமேல் எந்த கோயில்களுக்கு சென்றாலும் அங்கு கோயில்களுக்கு கொதிக்க நினைப்பதை பொருள் கேட்டு பிச்சை எடுப்பவர்க்கு கொடுப்போம் என்று முடிவு செய்தேன். என்னுள் நடந்த அந்த மாற்றத்தை உணர்ந்தேன். அந்த மற்றம் என் அறியாமையை ஒழித்தது.

வெளியே வேறு வழியின்றி பிச்சை எடுத்துக் கொண்டிருந்த ஒரு பாட்டிக்கும் தாத்தாக்கும் அந்த பத்து ரூபாயை பகிர்ந்து கொடுத்தேன். ‘நல்ல இருப்பா நீ..’ என்று சொன்னார்கள்… உள்ளே வணங்கிய அந்த ஆஞ்சநேயர் தந்த ஆசீர்வாதம் போல் உணர்ந்தேன்… அப்படி ஒரு மன நிறைவு இருந்தது அவர்கள் முகத்தில்… இதை படித்த சில பேர் நான் நாத்திகனாக மாறுகிறேன் என்று நினைக்கலாம். ஆனால் எனக்கு அப்படி தோன்றவில்லை. அன்று சொன்னாரே அறிஞர் அண்ணா… ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்று… அப்படி ஒரு மாற்றமாக தான் தெரிகிறது எனக்கு.

Advertisements

6 thoughts on “முற்போக்கான மாற்றம்..!

  1. நீ இதை உணர்வதற்கு எடுத்த நாட்கள் அதிகம்….
    அன்பே சிவம் என்று சொல்வோம்…

    1. உண்மை தான்… கொஞ்சம் அதிகமான நாட்களை தான் எடுத்துக் கொண்டேன்… அன்பும் சிவமே என்று சொல்கிறேன் நான்..

  2. hey nice thought…. Keep it Up!
    Thanks for your idea…
    i also continue with your way… thank you for your words ” i also change”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s