மாறுகிறேன் நான்..!

“மாற்றம்” – பலர் இதை ஒரு சாதாரண சொல்லாகவே நினைக்கிறார்கள்.ஆனால் நான் இதை ஒரு சாதரண சொல் என்றே சொல்ல மாட்டேன்.எல்லோருடைய வாழ்கையிலும் தன் இடத்தை பதித்துள்ள ஒரு அசாத்திய மந்திர சொல் என்றே சொல்லுவேன். நேற்று..இன்று.. நாளை..என்று மூன்று காலங்களிலும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் ஒன்று தான் இது.மாற்றம் என்ற ஒன்று மட்டும் இல்லை என்றால் இந்த உலகமே அர்த்தமற்றதாகிவிடும்;இவ்வளவு தான் வாழ்க்கையா என்று ஒரு சலிப்பு வந்து விடும்.எனவே தான் இந்த மாற்றம் மட்டும் மாறாமல் நடந்து கொண்டே இருக்கிறது.

நம் வயது ஏற ஏற,நம்முடைய உருவம் மாறுவது போல நம்முடைய வாழ்க்கை முறை,சிந்தனை,வெளியுலக பார்வை,எண்ணம் என்று எல்லாமே மாறி வருகிறது.நமக்குள் நடக்கும் மாற்றங்களை பல நேரம் நம்முடன் நெருக்கமாக உள்ளவர்கள் ஏற்றுகொள்ளமாடர்கள் என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி இருக்கிறது.அந்த பழமொழி எனக்கு பல முறை உண்மையாகவே பட்டிருக்கிறது.ஆனால் அது ஒரு நல்ல மாற்றமாக இருக்கும் பட்சத்தில் அந்த நெருக்கமானவர்களை கொஞ்சம் புண்படுத்த நேருடிகிறது.

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்த மாற்றங்கள் நம்மிடையே நடந்து கொண்டே தான் இருக்கும்.உருவ மாற்றங்களை நம் புறக்கண்களால் எளிதில் கண்டு கொள்கிறோம்.ஆனால் நமக்குள் நடக்கும் மற்ற மாற்றங்களை நம் மனக்கண்கள் பல நேரம் உணர்வதில்லை.உண்மை என்னவென்றால்,அந்த மாற்றங்களை நாம் எப்போது உணர்கிறோமோ,அப்போது தான் அதன் முழு தாக்கம் வெளிப்படும்.

இப்படி என்னுள் நடந்த,நடக்கும் மாற்றங்களை நான் உணரும்போதெல்லாம் அவற்றை “மாறுகிறேன் நான்…” என்ற இந்த வகையின் பதிவு செய்ய போகிறேன்…

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s