நான் கடவுள்

படம் வந்து கிட்ட தட்ட இரண்டு மாசம் கழிச்சு இந்த படத்த பத்தி எழுதறேன்.படம் வந்த அடுத்த நாள் தியேட்டர்ல போய் பார்த்தேன்.பார்த்து அப்படியே அசந்துட்டேன்.என்ன சொல்றதுன்னு தெரியல.வாயடைத்து போனேன்.கண்டிப்பா இன்னொரு தடவ பார்த்திட்டு தான் இந்த படாத பத்தி எழுதனும்னு நினைத்தேன்.போன வாரம் தான் இரண்டாவது தடவை பார்த்தேன்.இரண்டாவது முறையாக வாயடைத்து போனேன்.முதல் தடவை பார்த்ததை விட அந்த படத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது என்றே சொல்வேன்.ஒரு அகோரியின் உலகத்தை பார்க்கப்போகிறோம் என்ற எண்ணத்தில் போன எனக்கு இன்னுமொரு உலகத்தையும் கண் முன் உயிரோட்டமாக காட்டியிருந்தார் பாலா. நாம் கண்டும் காணாதவாறு விடப்பட்ட உலகம்.பரிதாபதிற்குடைய பிச்தைக்கரர்களின் உலகம் அது. இவ்வளவு சொகுசாக வாழும் இதே உலகத்தில் தான் இப்படியும் ஒரு மக்கள் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள் என்று ஒரு நிமிடமாவது சிந்திக்க வைக்கிறது இந்தப் படம்.படம் பார்க்கும் ஒருவன் ஆத்திகனாக இருந்தால் கூட “கடவுள் இருக்கிறாரா ?” என்று ஒரு நொடியாவது சிந்திக்க வைக்கும் படம் இது. இந்த படத்தை பார்க்கும்பொழுதும், பார்த்து முடித்த பின்பும் ‘நாம் எந்த குறையும் இல்லாம நல்ல கை கால்களோடு இவ்வளவு நல்லா பிறந்ததே பெரிய வரம்’ என்று ஒவ்வொருவர் மனதிலும் கண்டிப்பாக ஒரு எண்ணம் தோன்றும்.  

 நம்மில் பல பேர்க்கு ஒரு அகோரி எப்படி இருப்பார்னு பார்த்திருக்க வாயிப்பிலை. ஆனால் ஒரு அகோரி இப்படித்தான் இருப்பார்னு நன்றாக காட்டியுள்ளார் பாலா.  அதற்கு ஆர்யாவும் ரொம்ப கஷ்டப்பட்டு தன் உழைப்பின் மூலன் கை கொடுதுள்ளார். இந்த கதாப்பாத்திரத்தின் வழியாக அகோரிகள் சாதரண மக்கள் மற்றும் அவர்களின் விருப்பு வெறுப்புகளிடம் இருந்து எவ்வளவு பாதிக்கபடாதவர்களாக இருக்கிறார்கள் என்பதை தெளிவாக காட்டியுள்ளார்.ஹம்சவல்லி என்ற கதாப்பாத்திரத்தில் புகுந்து ஒரு பார்வையற்றவரகவே வாழ்ந்திருக்கிறார் பூஜா. தன் நடை, உடை, பாவனை, பேச்சு என்று எல்லாவற்றில்லும் உயிரோட்டத்துடன் நடித்துள்ளார். அதுவும் கிளைமாக்ஸ் காட்சியில் பேசும் வசனங்களுக்கு தன் நடிப்பின் மூலம் உயிர் கொடுத்திருக்கிறார்.படம் முழுதும் ஒரு இடத்தில் கூட ஆர்யா, பூஜாவை பார்க்கவில்லை. ருத்ரன், ஹம்சவைல்லியை தான் பார்த்தேன். அந்த அளவு அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்காங்க இவுங்க ரெண்டு பேரும்.   

naan-kadavul

சில படத்தை பார்த்தா ஒருத்தர் ரெண்டு பேர் தான் நமக்கு ரொம்ப பலமானவர்களா தெரியும். ஆனா இந்த படத்தில அப்படி ஒருத்தர் ரெண்டு பேர கண்டுபிடிக்க முடியல.  என்ன்னா எல்லாரும் ஒருத்தர்க்கு ஒருத்தர் பலமானவர்களா வேலை செஞ்சிருக்காங்க. அப்படி உள்ள பலங்களில் ஒரு மிகப்பெரிய பலம் தான் இசை ஞானி இளையராஜா. பாலா நமக்கு தெரிவிக்க நினைத்த உணர்வுகளை தன் பின்னணி இசை வழியாக கனக்கச்சிதமாக வெளிக்கொண்டு வந்துள்ளார் இளையராஜா.”பிச்சைப்பாத்திரம்” பாடல் மனதை கொஞ்சம் கனமாக்குகிறது. பாடல் வரிகளை எழுதியவர் இளையராஜா என்பது நம்மக்கு ஒரு இன்ப அதிர்ச்சி. ஜெயபாலனின் வசனங்கள் ரொம்ப தைரியமனவை. அதுவும் கிளைமாக்ஸ் காட்சியில் ஹம்சவல்லி பேசும் வசனங்கள் நூறு பெரியார்களை கண் முன் காமிக்கிறது.கேள்விகள் பல நம் முன் வந்து விழுகின்றன. ஆனால் அதற்கான பதில்கள் தான் நம்மிடம் இல்லை.ஆர்தர் வில்சன் தன் மிகத்திறமையான ஒலிப்பதிவின் மூலம் ஒவ்வொரு காட்சிக்கும் மெருகூட்டியிருக்கிறார்.வில்லன் தாண்டவனாக நடித்த ராஜேந்திரன் வில்லத்தனத்தை பயங்கரமாக காட்டியுள்ளார்.  

இப்படியுள்ள எல்லா பலங்களையும் ஒன்று சேர்த்து ஒரு மிகப்பெரிய படைப்பாக உருவாக்கிய பலம் தான் பாலா.  நான்கே படம் தான் எடுத்துள்ளார். அனால் ஒவ்வொனுன்றும் ஒரு தவம். இது மாபெரும் தவம் என்றே நான் சொல்லுவேன்.அதுவும் இந்த உலகிற்கு தான் சொல்ல நினைத்ததை சொன்ன மிக தைரியமான தவம். படத்தில் கடவுளை கெட்ட வார்த்தையால் திட்டுவது போல ஒரு காட்சி வரும். அதை பார்க்கும் போது சாதரணமாக ஒரு ஆத்திகனுக்கு வரவேண்டிய கோபமோ வருத்தமோ எனக்கு வரவில்லை. தியேட்டர்ல இருந்த யாருக்குமே அப்படி ஒரு கோபமோ வருத்தமோ வரவில்லை என்று தான் நினைக்கிறன். அப்படி ஒரு திரைக்கதையை அமைத்திருந்தார் பாலா. அப்படி ஒரு தாக்கத்தை படம் பார்க்கும் மக்களிடம் கொண்டு சேர்த்திருந்தார்.பொதுவாக பாலாவின் படங்களில் வில்லன் மேல் ஒரு கோபம் நமக்கெல்லாம் வரும். இந்த படத்தில் அந்த கோபத்தை அதிகமாக்கியுள்ளார்.இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா என்று நம்மை நடுங்க வைத்திருக்கிறார்.இதுவரை வந்த படங்களில் பிசைக்கரர்களை ஒரு நகைசுவைக்க்காகவோ அல்லது ஒரு கேளிக்கூத்தாகவோ தான் காட்டியுள்ளனர். ஆனால் இந்த படத்தில் அவர்களின் இருடடிந்த வாழ்கையை நம் கண் முன் காட்டியுள்ளார். இப்படி ஒரு படத்தை இதுவரை யாரும் எடுத்ததில்லை. இனிமேலும் யாரும் எடுக்கப் போவதில்லை என்றே சொல்லுவேன்.ஒரே ஒரு ஆதங்கம் என்னவென்றால் பாலா பேசாமல் “A” சர்டிபிகேட் வாங்கிட்டு சென்சார் போர்டு செஞ்ச கத்திரிகளை தவிர்த்திருக்கலாம் என்பது தான்.     

‘பகவான் மனுஷ்ய ரூபனே’ என்று “இவன் தான் பாலா” என்ற புத்தகத்தில் ஒரு இடத்தில பாலா எழுதியிருப்பார். அதைத் தான் இந்த படத்தின் மையக் கருவாக காட்டியுள்ளார்.கடவுள் பாத்துப்பார் என்று நாம் பல நேரங்களில் நம் கண் முன்னே நடக்கும் தப்புகளில் இருந்து நம்மை நாமே தூரப்படுதிக்கொள்கிறோம். அந்தக் கடவுள் வேறு யாரும் இல்லை, நாம் ஒவ்வொருவரும் தான் என்பதை தான் இந்த படத்தின் வழியாக சொல்லியிருக்கிறார் என்று நான் நினைக்கிறேன்.ஒரு கெட்டதை காமிக்க பிசைக்கரர்களுக்கு நடக்கும் அதர்மங்களையும்,  அதனால் அவர்கள் படும் கஷ்டங்களையும், அவர்களை காக்கும் ஒரு மனித சக்தியை காமிக்க ஒரு அகோரியையும் அழகாக இணைத்திருக்கிறார்.சொல்லப்போனால் இது ஒரு சாதாரண படம் இல்லை. நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்கையில் தெரிந்து, புரிந்துகொள்ள வேண்டிய உண்மைகள் பலவற்றை உணர்த்தும் பாடம் இது. “அஹம் ப்ரஹ்மாஸ்மி” என்று ஆர்யா படத்தில் பல முரை சொல்லுவார். அதற்கு “நான் கடவுள்” என்று அர்த்தமாம்.நாம் ஒவ்வொருவரையும் “அஹம் ப்ரஹ்மாஸ்மி” என்று ஒரு நொடியாவது நம மனதில் நினைக்க வைக்க பாலா எடுத்த ஒரு உன்னதமான முயற்சியே “நான் கடவுள்”.

Advertisements

6 thoughts on “நான் கடவுள்

 1. aama raja,movie paarthitu i was also stunned. ipdi kooda oru kalaignaala unmaiya,ulaga nadapuhala pattavarthama solla mudiyuma nu??? a big salute to his courage!!Enna aathangamna-ivlo positive influence kuduka mudiyira ithey mediava sila per “livelihood” ngra perila exploit panraangangrathu thaan…….Ennaiya romba paathichathu the first shot of the beggars scene, I stood rather helpless….Ivlo kodumai nadakratha namma gavanikaama, kandukaama,oru chinna circle kulla ithu thaan ulahamnu nenachitu, nammaloda ego va valathitu enna saathika porom?? Movie paakra ovvoarutharukum ithu egola periya adiya irukum,irukanumnu pray panraen….

  By the way, I am regularly following up your blog……

 2. Yes… U r very true akka… நம்ம ரொம்ப சின்ன வட்டத்துக்குள்ள வாழ்ந்திட்டு இருக்கோம்.. அதுவும் அந்த வட்டத்துக்குள்ள அவ்ளோ வெறுப்பு, பொறாமை,ஈகோ… இந்த வட்டத்துக்குள்ள ஒரு சின்ன கஷ்டம் வந்த கூட பெரிய சாபமா தெரியுது… ஆனா இந்த படத்தில காமிச்ச மக்கள் எல்லாரும் தினம் தினம் வாழ்க்கையையே சாபமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்… Hope a change comes in their life.. in our life too….

  n hope I am not boring you with my posts in this blog… 🙂

 3. Had it been boring,useless stuff, I wouldn’t have turned up one another time:)….

  “Hope a change comes in their life.. in our life too….”—-I wish,yearn and pray that the change in our lives give us the courage and strength to bring a change in theirs…….Greedy I am, I want “WE” be the change in their lives…………………….they,referring to the collective unfortunate……..in all forms!

 4. Ilayaraja is the GOD of the Movie.

  Bala is appreciable for the Bold theme. He has created his own Genre.

  Arya, Pooja n Rajendran have done commendable performances.

  The dialogues are by Writer Jeyamohan and not Jeyapalan.

  But personally I dont like the movie in a whole. The scenes are bits and pieces due to very mediocre Editing. Some scenes might have been censored it seems.

 5. Yes you both are rite..

  This is a wounderful film which no one can expect.. it’s very touching.. Bala is the person who has the guts to tell the truth of human life..

  Life is short but it doesn’t ends in the circle which we are living… In each second we are thinking only about our ego’s, worries,happiness and many more… but we didn’t thought of people like this who are living in that much of trouble and sorrows..

  We should create a chance to change there life..

  JaiHind.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s