எப்போது தணியும் …?

“இலங்கையில் உள்ள தமிழர்கள் படுகொலை கண்டித்து ஒரு இளைஞர் சென்னையில் தற்கொலை செய்து கொண்டார்” என்று ஒரு செய்தியை நேற்று எங்கேயோ படித்தேனா கேட்டேனானு நியாபகம் இல்லை…ஆனால் அந்த செய்தி எனக்கு தெரிஞ்ச போது கொஞ்சம் அதிர்ச்சி ஆனேன்… எதோ விவரம் தெரியாத பய்யன் யோசிக்காமல் செய்யாமல் உணர்ச்சிவசப்பட்டு தற்கொலை முடிவை எடுத்து விட்டான்னு நெனச்சேன்.. இப்ப எனக்கு அப்படி நினைக்க தோனல..ஒரு நாள்ல ஏன் இந்த மாற்றம்னு கேட்குறீங்கள?? எல்லா மாற்றத்துக்கும் ஒரு காரணம் இருக்குங்க… இந்த மாற்றத்துக்கு அவர் தற்கொலை செய்யறத்துக்கு முன்னால அங்கிருந்த மக்களிடம் எழுதி தந்திருந்த அறிக்கை கடிதமே காரணம்.. அவர் எழுதின அந்த அறிக்கையை நண்பர் ஒருத்தர் forward பண்ணிருந்தார்… அந்த அறிக்கையை படிச்சப்ப தான் எனோட நினைப்பு மாறிச்சு..

அந்த 26 வயதான இளைஞர் எழுதினத படிச்ச போது அது ஒரு அறிக்கை மாதிரியே எனக்கு தெரியல… அதில அவோரட ஆதங்கத்தையும்,கோபங்களையும்,வருத்தங்களையும்,கோரிக்கைகளையும் கொட்டியிருக்கிறார்… அவர் உணர்ச்சிவசப்பட்டு ஒரு நொடியில் எடுத்த முடிவாக தெரியல… தான் என்ன செய்ய போகிறோம் என்பதை நல்ல முடிவு செஞ்சிட்டு தான் பண்ணிருக்கார்.. அந்த எழுத்திலிருந்து அவர் ஒரு நல்ல சிந்தனையாளர் என்பது புரியுது…இப்படடிப்பட்ட சிந்தனையாளர் ஏன் இந்த தற்கொலை முயற்சிய கையில எடுத்தார்னு நெனச்சா ஒரு பதிலும் தோனல… ஒருவேளை இப்படி எதாவது செய்து சொன்னாதான் மக்கள் தான் சொல்ல வருவதை கொஞ்சமாவது கேட்க முயற்ச்திப்பர்கள் என்று நினைத்திருக்கலாம்…

இலங்கையில் உள்ள தமிழர்கள் பட்ற கஷ்டங்கள் பத்தி நாங்கள் எங்கள் ரூமில் பேசாத நாளே இல்லை… இத மாறி நிறைய பேர் ஆதங்க பட்டுக்குறாங்க… ஆனா அந்த ஆதங்கங்களை உணர வேண்டிய அரசியல் வாதிககளும், இந்திய அரசாங்கமும் உணராமல் போனதே முத்துகுமாரை இந்த நிலைமைக்கு தள்ளியிருக்கலாம்…நம்ம தமிழ்நாட்ல உள்ள அரசியவள் வாதிகள் இந்த பிரச்சனையில் கூட ஒற்றுமையா நின்னு உருப்படியா எதாவது ஒன்னு செய்ய முடியாத லாயிக்கிலதவர்களாகத் தான் இருக்காங்க… இதுல கூட ஒருத்தர் மேல ஒருத்தர் குற்றம் சொல்லியே அவங்க கட்ச்சி பெற உயர்த்திக்கனும்னு தான் நினைக்குறாங்க…

கலைஞர் ஒரு பக்கம் மத்திய அரசு இதில் தலையிட்டு போரை நிருத்தலைனா எம்.பிக்கள் எல்லாரும் ராஜினாமா செய்வாங்கனும்னு,கண்ணீர் வருது, மனசு வலிக்குதுனு சேது பட டயலாக் மாதிரி பிலிம் காட்டுறாரு.. இன்னொர்று பக்கம் அம்மா அங்க உள்ள தமிழ் மக்கள் பட்ற கஷ்டங்களை கொஞ்சம் கூட நினைச்சு பாக்காம LTTE பத்தி குறை சொல்லிட்டும், தி.மு.க மக்களை திட்டிட்டும் இருக்காங்க… தமிழ் மொழிய காத்து வாழவசிடு இருக்குற நம்ம மருத்துவர் ராமதாஸ் அய்யா இலங்கை தமிழர்க்கான போராட்டத்தில் “இருக்கேன்… ஆனா இல்ல..”ங்கிற மாதிரி அப்பப்ப கலைஞருக்கு oppositeஆ அறிக்கை விட்டுட்டும், திருமாவலவர்க்கு வைத்தியம் பாத்திடும் effect போட்டுட்டு இருக்கார்.. நம்ம பெரும் போராளி திருமாவளவன் அவர்கள் சாகும் வரை உண்ணா விரதம்னு கொஞ்சம் சீன் போட்டாரு… அப்பறம் பப்பு ஒன்னும் வேகாதினு தெரிஞ்சு வாபஸ் வாங்கிட்டார்..ஆனா பாவம் இந்த முத்துக்குமார் இவங்கள மாறி எபிபிச்ட் எல்லாம் போடாம செய்து காமித்து விட்டார்.. இலங்கையில் இருக்கிற ராஜபக்சே நம்ம நாட்டு அரசியல் வாதிகள அங்க வந்து LTTE கிட்ட பேச சொன்னது தான் உச்ச கட்ட காமெடி..

நம்ம மத்திய அரசோ, நீங்க எல்லாம் என்னமோ பண்ணிகோங்க, எங்க தைலைவர் ராஜிவ் காந்திய கொன்ன LTTEயும், பிரபாகரனும் அழிஞ்சப் போதும்னு இலங்கை ராணுவத்திற்கு உதவி பண்ணிட்டு இருக்கு. இது எல்லாத்துக்கும் நடுவில பிரபாகரன் பிடிபட்டால் இந்தியாவிடம் தான் ஒப்படைக்க வேண்டும்னு சைக்கிள் gapல ஒரு பிட்டு வேற. சும்மா பேருக்கு சிவ ஷங்கர் மேனனையும், பிரணாப் முகர்ஜியையும் இலங்கைக்கு போயிட்டு வர சொல்லி, கூட்டணி கட்சி தி.மு.க க்கு support காமிச்சது நம்ம மத்திய அரசு…அத கூட அங்க உள்ள பாதி தமிழ் மக்கள் செத்து மடிந்த பின்னரே செஞ்சது.இந்திய அரசுக்கு இலாங்கையில நடக்குற போரை நிறுத்தும் (எண்ணம்)சக்தி இல்லாமல் போனாலும், அங்க கஷ்ட படுற மக்களை மனசுல வச்சு இலங்கை அரசுக்கு செய்யுற ராணுவ உதவியையும், ஆயுத உதவியையுமாவது நிறுத்தலாம்.

பாவம்.. அங்கே இருப்பவர்களும் நம்மை போல அல்ல மனிதர்கள் தானே.. இருக்க இடம் இல்லாம காட்டுக்குள்ள, மழையில… நல்ல சாப்பாடு இல்லாம..காயங்களுக்கு மருந்து இல்லாம..சொந்த பந்தங்கள பறிகொடுத்திட்டு அவங்க சொந்த மண்லயே நல்ல வாழ முடியாம கஷ்ட பட்டுட்டு இருக்காங்க… நீங்க கேட்கலாம்… ஏன் இவ்ளோ கஷ்ட படுறாங்கன்னு… பேசாம இலங்கை இராணுவம் கூட ஒத்து போகலாமேனு…நம்ம இந்தியாவுல வட இந்தியர்கள் இனிமேல் தமிழ் மக்கள் இந்திய அரசியலில் முக்கிய பதவிகளை வகிக்க முடியாது… படிப்பில், வேலை வாய்ப்பில், மற்றும் சமூக அந்தஸ்த்தில் நீங்கள் தமிழர்களை விட எங்களுக்கு தான் முன்னுரிமைனு சொன்னா சும்மா இருப்பிங்களா? எதிர்த்து போராட மாட்டிங்க? சம உரிமை கேட்க மாட்டிங்க? அப்படி போராடியும் குடுக்காட்டி நாங்க பிறந்ததும் இந்த மண் தான்… எங்கள்ளுக்கு தனி நாடு குடுன்னு கேட்க மாட்டிங்க? இந்த மாறி நம்ம நாட்ல நம் உரிமைகள் பறிக்க படல… அதனால நாம சும்மா இருக்கோம்… ஆனா அங்க தமிழர்களின் உரிமை பறிக்க படுறதுனால அவங்க போராடுறாங்க..கஷ்ட பட்டாலும் பாடுவோமே தவிர உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம்னு இருக்காங்க.

தங்கள் ஆதிக்கத்தை பலப்படுத்திக் கொள்ள ஒவ்வொரு முறை இலங்கை அரசு முயற்சி செய்யும் போதும்,அங்கிருந்த தமிழ்ர்கள் அவர்களின் உரிமைகளை இழந்து வர்றாங்க.இப்பொழுது தமிழர்களின் எதிர்ப்பை உலக பார்வையில் இருந்து மறைக்க,LTTEயை அழிக்கிறேன் என்ற பெயரில் தமிழ் மக்களை அழித்துக் கொண்டிருகின்றார்கள்.தினமும் சிறு குழந்தைகள் நாம் எதுக்கு சாகிறோம் என்ற புரியாத வயசில்ல குண்டுகள் விழுந்து பள்ளிக்கூடங்களில் சாகுறாங்க.எத்தனயோ பெண்கள் ரொம்பவும் கொடூர முறையில சித்திரவதை படுத்தப் பட்டு கற்பழிக்கப்படுறாங்க.தமிழர்களிடம் ஒரு மிருகம் போலவே தான் அவங்க நடக்குறாங்க.இதெல்லாம் நான் எ கற்பனையில கதையா சொல்ல.இந்த கொடுரத்தை நான் youtube வீடியோல பார்த்தேன். இப்படி கஷ்ட படுற சாதரண மக்கள் ஒரு stageல அந்த அரசையே எதிர்த்து சண்டை போடும் போராளிகளா மாறிடுராங்க.அவங்களோட வலியும் நோக்கமும் நம்மள மாறி சொகுசா வாழற மக்களுக்கு அவ்வளவு ஈசியா புரியறது இல்ல.

நான் நிறையா தடவ ஆச்சர்ய படுற விஷயம் என்னென்னா… மத்த நாடுகளும், ஏன் நம்ம நாடுல உள்ள தமிழ் மக்கள் தவிர எல்லாரும் அங்க நடக்கிற கொடுமை எல்லாம் ஒரு குறிப்பிட்ட தமிழ் இனத்துக்கு நடக்கறதா நினைக்குறாங்க.அதனால அவ்ளோ முக்கியத்துவம் குடுக்கறது இல்ல. அவங்கள தமிழ் இனமா பார்க்காம நம்மள போல அவங்களும் மனிதர்கள் தான் என்று நினைச்சா அங்க கஷ்ட படுற மக்களோட வழி புரியும். ஒரு பள்ளிக்கூடத்தில குண்டு போட்டு, சின்ன சின்ன குழந்தைகள சாகடிக்குறாங்கன்னா.. அந்த குழந்தைகள் இலங்கை அரசுக்கு என்ன தப்பு செஞ்சிருக்கும்னு நெனைக்குறீங்க?? தமிழ் இனத்தில் பிறந்தது தவிர வேற ஒரு தவறும் எனக்கு தெரியல. அப்பன்னா இத இனப்படுகொலைனு சொல்லாம வேற எப்படி சொல்ல முடியும்னு சொல்லுங்க..! இதை பல நாடுகள் தெரிந்தும், பேசாமல் இருப்பதற்கு திரும்பவும் இந்த பாழாப்போன அரசியல் காரணங்கள் தான்.

எந்த ஒரு பிரச்சனைக்கும்  வன்முறை தீர்வாகாது என்பது பலமுறை உறுதி செய்யப்ப்பட்ட அசைக்க முடியாத உலக நியதி.ஆனா அத சரியா புரிஞ்சுக்காம இலங்கைல இரண்டு பிரிவும் சண்டை போட்டுட்டு இருக்காங்க. இதனால் இரண்டு பிரிவிலும் பல உயிர்கள் போயிட்டு இருக்கு. எல்லா உலக நாடுகளும் சேர்ந்து இந்த போரை நிறுத்தி, ஒரு நல்ல நடுநிலையான அரசியல் தீர்வு கூடிய விரைவில் வரும்னு நம்புவோம். இனிமேலாவது நம் அரசியல் வாதிகள், இந்த மாதிரி உணர்வுப்பூரனமான விஷயங்களை தம் கட்சி விளம்பரத்துக்கு உபயோகப்படுத்தாமல் இருந்தாலே, அது முத்துக்குமாருக்கு செய்கிற பெரிய அஞ்சலியாகும்.இந்த விழிப்புன்னர்வை மக்கள் மத்தியில ஏற்படுத்த நண்பர் முத்துக்குமார் மாதிரி தீக்குழிக்க வேண்டாம்.ஏன்னா தற்கொலையும் எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வாகாது.நண்பர் மடிந்து ஏற்படுத்த நினைத்த விழிப்புணர்வை நாம் வாழ்ந்து ஏற்படுத்துவோம்.

நண்பர் முத்துக்குமார் அவர்களுக்கு நாம் செய்யும் அஞ்சலியாக மக்களளுக்கு தெருவிக்க நினைத்த அவருடைய கடைசி செய்தியை இந்த உலகிற்கு சொல்லுவோம்.என்னுடைய பங்காக இந்தப் பதிவில் அவருடைய கடைசி மடலை வெளியிடுகிறேன்.

இதோ… முத்துகுமாரின் கடைசி மடல் உங்களுக்காக…

https://balasrini.wordpress.com/2009/01/30/muthukumar/

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s