புகைப்படம்!!!

நான் இந்த blog ஆரம்பித்த பிறகு தமிழில் எதாவது ஒரு பதிவு எழுதனும்னு ரொம்ப நாட்களா ஒரு ஆசை.ஆனா எழுத கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்தா என்ன எழுதுவது என்று தெரியாது.நான் பிறர் எழுதின மற்ற தமிழ் பதிவுகளை படிக்கும் போது நாமும் இப்படி எழுதினா என்னனு தோணும்.அப்படித்தான் இன்னைக்கும் ஒருத்தர் தன் பள்ளி வாழ்க்கையை பற்றி எழுதிய தமிழ் பதிவை படிச்சிட்டு இருக்கும்போது,நாமும் இப்படி ஒரு பதிவு எழுதலாமேனு தோணிச்சு.கண்டிப்பாக எழுதனும்னு முடிவும் பண்ணினேன்.

பள்ளி வாழ்க்கையில் எந்த ஒரு நிகழ்வை பற்றி முதலில் எழுதலாம்னு யோசிச்சிட்டு இருந்த போது,பல நினைவுகள் என் கண் முன் ஓடின.அப்போ திடீர்னு ஒரு எண்ணம்.நாம் நம்மளோட அந்த பசுமையான நிகழ்வுகளை எதாவது ஒரு வழியில பதிவு செய்துள்ளோமா என்று யோசிக்க தோணியது.பல நிகழ்வுகளை கேமரா மூலம் புகைப்படமாக பிடித்து வைத்திருந்த நியாபகம் வந்தது.அப்போது கொஞ்ச நாட்களுக்கு முன் நானும் என்னோட ரெண்டு பள்ளி நண்பர்களும் எங்கள் பள்ளி கதையயை பற்றி பேசிய நியாபகமும் வந்தது.அன்று நாங்கள் பேசிக்கொண்டிருந்த போது,நிறைய ரோல்களை பிரிண்ட் போடாமலேயே விட்டதை நினைத்து ரொம்ப அங்கலாப்பு பட்டுக் கொண்டோம்.நாங்க அப்போ படிச்சிட்டு இருந்ததுனால எல்லா ரோல்களையும் உடனுக்குடன் பிரிண்ட் போடும் அளவிற்கு எங்களிடம் பணம் இல்லை.இப்போ பிரிண்ட் போடற அளவுக்கு ஒவ்வொருதர் கிட்டயும் வசதி இருக்கிறப்போ அந்த ரோல்கள் எங்க இருக்குனு தெரியல.அந்த ரோல் அவன் கிட்ட இருக்கும் இவன் கிட்ட இருக்கும்னு வெறும் யூகங்கள் மட்டும் தான் இருக்கு.இப்போ யார் வீட்ல எந்த இடத்துல அந்த பிலிம் ரோல்கள் எல்லாம் இருக்குன்னு அந்த கடவுளுக்கு தான் தெரியும்!!!

camera

அந்த நாட்கள்ல பிலிம் காமேரவில படம் எடுத்து அத பிரிண்ட் போட்டு ஒவ்வொரு போடோவையும் ஒருத்தர் கை மாறி ஒருத்தர் பாக்குறதே ஒரு தனி இன்பம் தான்.அதுலயும் அந்த போட்டோ நல்லா விழுந்திருக்குமா இந்த போட்டோ நல்லா விழுந்திருக்குமானு ஒரு சஸ்பென்சும் கூடவே இருக்கும்.அதுல நம்ம ரொம்ப எதிர்பார்த்த போட்டோ நல்லா விழலேனா அது பெரிய அங்கலாப்பு கலந்த சோகமா தெரியும்.இப்போ எல்லாம் டிஜிட்டல் காலமா மாறிப் போச்சு…அவனவன் டிஜிட்டல் காமெராவையும், கேமரா மொபைலையும் கையில வச்சிட்டு போட்டோ மட்டும் எடுத்தா நல்லா இருக்காது மச்சி… விடியோவும் எடுத்தா தான் உயிரோட்டமா இருக்கும்னு சொலிட்டு அலையறானுங்க.. உடனுக்குடன் பிரிண்ட் போடமலேயே லேப்டாப், கம்ப்யூட்டர்ல transfer பண்ணி வேணுங்க போது எடுத்து பாத்துக்குறோம்… பத்தாகுறைக்கு ஒருத்தருக்கு ஒருத்தர் போடோஸ் பரிமாறிக்க ஈமெயில், ப்ளூ டூத் வேற… இப்ப உள்ள டிஜி காமேராவுல தான் எவ்ளோ வசதி இருக்கு!! போட்டோ நல்லா விழுந்திருகானு பிரிண்ட் போடாமலே அப்பவே பார்த்திட்டு, நல்லா விழலைனா அப்பவே இன்னொரு தடவ எடுத்துக்கலாம்.. அப்படி ஒரு போட்டோ எங்காவது ஷேக் ஆகி, இன்னொரு தடவ நல்லா எடுத்திட்டு, ஷேக் ஆன போடோவ delete பண்ணவான்னு கேட்டா நக்கலா என்னைய insult படுத்தாதடானு டயலாக் விடறான்… ஏன்னு கேட்டா 2GB memory card உள்ள இருக்குனு  நம்ம ஆளுங்ககிட்டவே இருக்குற குசும்போட சொல்றான்…

இவ்ளோ தொழில்நுட்ப வளர்ச்சியினால நம்மளோட வாழ்க்கை முறையே ரொம்ப சொகுசா மாறிருக்கு… அதுக்கு இது ஒரு சின்ன உதாரணம்… ஆனா பழைய முறைகளில் உள்ள சின்ன சின்ன சந்தோஷங்களையும், இன்ப அதிர்ச்சிகளையும், குட்டி குட்டி ஏமாற்றங்களையும் miss பண்றோம்ல???

ஏதோ ஒன்று எழுத ஆரம்பிச்சு எங்கேயோ வந்து முடிச்சிருக்கேன்… ஆனா தமிழில் எழுதுற அனுபவம் எனக்கு ரொம்ப நல்லா இருக்கு… ஆனா படிக்கற உங்களுக்கு எப்படி இருக்குனு தெரியல… 🙂 இன்னைக்கு எழுதனும்னு நினச்ச பள்ளி வாழ்க்கையை பத்தி இன்னொரு பதிவில் கண்டிப்பா எழுதுறேன்… இந்த பதிப்பை படிச்சிட்டு திட்றதா இருந்தாலும், பாராட்டுறதா இருந்தாலும் (மாட்டிங்கனு நினைக்கிறேன்… 🙂 ) commentsல சொல்லுங்க…

பிறகு, மறக்காமல் இந்தப் பதிவை பாருங்க… https://balasrini.wordpress.com/2008/11/24/help-this-guy-to-get-a-life

Advertisements

4 thoughts on “புகைப்படம்!!!

  1. டேய் பங்காளி நல்ல தன் இருக்கு எப்பிடி தமிழ் டைப் பண்ணேன் தெரியல்ல. நான் கூகிள் இருக்குற இந்திக் மொழி மாற்றல் வெப்சைட் டைப் பண்ணேன் . நல்ல முயற்சி

    http://www.google.com/transliterate/indic/Tamil

  2. @ Sathish… தேங்க்ஸ் டா பங்காளி… நானும் அதே கூகிள் வெப்சைட் வழிய தான் தமிழ் டைப் பண்ணேன் டா…

  3. டேய் உனக்கு தமிழ் இவ்ளோ நல்லா வரும்னு எனக்கு இன்னைக்கு தாண்டா தெரியும்… And abt ur post, recollecting the past will never be boring, that too school days will be everyone’s favourite….. Waiting for ur next post abt us….. 😉

  4. @ vicchu… Yes da… I would like to bring back our happy school days in this blog, so tat we can have it as a golden memory forever…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s