Feeds:
Posts
Comments

Archive for the ‘என் கிறுக்கல்கள்’ Category

உன் கிட்ட கொஞ்சம் பேசனும்..
தாரளமாக பேசலாமே!
நீ அவளை காதலிக்கிறாயா???
ஏன் இந்த கேள்வி??!!
இல்லை, நீ கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை… ஆனால் என்னை மட்டும் அவளிடம் நெருங்க விட மாட்டேன் என்கிறாயே. அதனால் தான் கேட்டேன்…
அடேய் மடையா… எப்போது அவள் என் கை பிடித்தாலோ.. அப்போதிலிருந்து நான் அப்படி தான் இருக்க வேண்டும்… அது காதல் இல்லை….. என் கடமை…
பொறுமை இழந்து பளீர் என அடித்தது அடை மழை!
சிரித்துக்கொண்டே வாங்கிக்கொண்டது அவளின் குடை!

Read Full Post »

தான் இப்புவியில் இருந்து சொல்ல நினைத்ததை
கொஞ்சம் மாற்றி
இறந்து சொல்ல நினைப்பதுதான் தற்கொலையோ??!!!

Read Full Post »

விபூதிப் பட்டையும் குங்குமப் பொட்டையும் இட்டுக் கொண்டாய்,
இந்துவாய் வாழ்ந்திட.
இயேசுவின் சிலுவையையும் கழுத்தில் சுமந்து நடந்தாய்,
கிருத்துவனாய் வாழ்ந்திட.
தலையில் குல்லாவும் முகத்தில் தாடியும் வைத்துக் கொண்டாய்,
இஸ்லாமியனாய் வாழ்ந்திட.
என்ன செய்தாய்… அட என்ன தான் செய்யப் போகிறாய்…
மனிதனாய் வாழ்ந்திட!!!

Read Full Post »

ஏய் குடையே! – உன்னை
இன்று முதல் என் நண்பனாக்கிக்கொண்டேன்.
காரணம் மொழிகிறேன்.அதையும் கேள்.
என்னவளை நான் தொடும் முன் – அந்த
மழை தொடாமல் நீ பார்த்துக்கொண்டதனால் தான்.

Read Full Post »

உணர்வுப்பூர்வமான அடையாளங்களை தொலைத்துவிட்டு…
உயிரில்லாத அட்டைகளை கொண்டு அலைகிறோம்…
மனிதர்களாய் இல்லை… வெறும் மண் பொம்மைகளாய்…
இதெல்லாம்…
பெரும் உண்மைகளை நிரூபிக்க அல்ல…
நம்மை நாமே நிரூபித்துக் கொள்ளவே!!!

Read Full Post »

புத்தம் மதித்த பூமி இருந்தது ஒன்று – அது
சதி யுத்தம் செய்யும் மண்ணானது இன்று.
அங்கு அமைதி போதிக்கும் மந்திர ஓசை ஒலிப்பது நின்று    எங்கும் தமிழீழத்தின் அழுகுரல் மட்டுமே கேட்குது இன்று.
மதம் போற்றி வளர்த்திட திளைத்த நாடே…
ஈழத் தமிழ் மகளின் மானம் காக்க மறுத்ததேனோ??
மதம் தெரிந்த உனக்கு…
கொஞ்சம் மனித நேயமும் தெரியாமல் போனதேனோ???

Read Full Post »

என் பொழுது விடிந்தது – நீ
தூக்கம் களைந்து சோம்பல் முறித்த போது தான்.
என் கண்ணில் வெளிச்சம் தெரிந்தது – உன்
விழிப் பார்வை என் மேல் கொஞ்சம் விழுந்த போது தான்.
என்னுள்ளே புத்துணர்வும் பூத்தது – உன்
அழகு மேனி குளிர் நீர் துளிகளை சுமந்த போது தான்.
எனக்கு தாகம் எடுத்தது – உன்
நுனி நாக்கும் தேநீர் ருசித்த போது தான்.
எனக்குள் இருந்த பசியும் புரிந்தது – உன்
செவ்விதழ்கள் கொஞ்சம் அன்னம் பருகிய போது தான்.
இப்படி சொல்லிக்கொண்டே போகலாமடி…
சுருங்கச் சொன்னால்…
நான் இன்னும் உயிர் [...]

Read Full Post »

அன்றொரு நாள்
உன்னிடம் ஒன்று சொன்னேன் – என்றும்
உன் நிழலாய் இருப்பேன் என்று…
இன்றோ! என்னை நானே கேட்டுக்கொண்டிருக்கிறேன்..
நிஜம் இல்லாமல் நிழல் மட்டும் எப்படி வாழ்வதென்று?!
உன் பதிலுக்காக… காத்திருக்கிறேன்…
வேறெங்குமில்லை… உன் கல்லறையில் தானடி!!
 
Just got inspired by the movie 7/g Rainbow Colony…

Read Full Post »

வாழ்வில் வானளவு உயர்வேன் என்றேன் அன்று
பேராசை படாதே என்றார்கள்
இன்று… உயர்ந்து நிற்கிறேன் !
பெரிய கொள்கைவாதிடா நீ என்கிறார்கள்
அன்று போலவே இருந்தேன் இன்றும்… செவிடனாய்!

Read Full Post »

நான் எழுத முயன்ற… எழுதி முடித்த…
முதல் கவிதை …

குளிர் தென்றலாய் வந்த உன்னை
என் வாழ்வில் நிலை வானமாக வைத்திட நினைத்தேன்…
ஆனால் நம் விதி செய்த சதி !!
கரைந்து மறையும் மேகமாக உன்னை மாற்றி…
உன் நினைவெனும் மழையில் என்னை நனைந்திட வைத்ததே !!

P.S.: This poem just came out of a try, after getting inspired by my bro Arun’s poetic attempts on the theme Lost Love.

Read Full Post »

Older Posts »