ஏதோ இனம் புரியா தாக்கம் என்னுள்- உன்
பிம்பம் என் விழிகளில் விழுந்திடும் பொழுது.
ஏதேதோ எழ முடியா ஏக்கம் என்னுள் – உன்
கை விரல் உனையரியாமல் என்னை தீண்டிடும் பொழுது.
ஏதோ மீள முடியா கிறக்கம் என்னுள்- உன்
செவ்விதழ் மொழியும் தமிழ் கேட்டிடும் பொழுது.
ஏதேதோ மறைக்க முடியா நடுக்கம் என்னுள் – உன்
நிழல் கூட என்னை நெருங்கிடும் பொழுது.
ஏதோ விளக்க முடியா கலக்கம் என்னுள் – தன்
நட்பினை இன்னொருவன் உன்னிடம் பகிர்ந்திடும் பொழுது.
ஏதேதோ தடுக்க முடியா தயக்கம் என்னுள் – என்
மனதினை உன் வசம் சொல்லிட வரும் பொழுது.
அடியே… அழகே… ஆருயிரே…
இத்தனை இத்தனை மாற்றம் செய்தாயே என்னுள் நீ
துளியும் உன்னை அறியாமலே!!!
இதை… இதை தான் தமிழும் சொல்லுமோ
காதல் மயக்கம் என்று?!?!?

Bala Nagesh S 






‘மீழ முடியா’ இல்லை. ‘மீள முடியா’
” ஏதேதோ எழ முடியா ஏக்கம் என்னுள் – உன்
கை விரல் உனையரியாமல் என்னை தீண்டிடும் பொழுது.”
Words of Soothing Love, Thanks for Posting it Bala
Thanks for the complements!!!